You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Sunday, August 29, 2010

பெண் விடுதலை வேண்டும்!!!!!!!!


நடந்தது என்ன? தோழர்களே !அந்த (face book) ஒளிப்பதிவை பார்க்கும் பொழுது, இது எதார்த்தமாக நடந்த ஒரு அவல சம்பவமாகவே தெரிகிறது.சில விசயங்களை நாம் சற்று நிதானித்துப் பார்த்து, இதற்கு ஒரு கட்டாய முடிவை, எடுத்தே ஆகக்கூடிய நிர்பந்தத்தில் இருக்கின்றோம்....செய்த செயல் கண்டிப்பாக கண்டனத்திற்குரியதும் விசாரணைக்குரியதுமாகும்...இனி இந்த நாய்களின் செயல் மீண்டும் சபைக்காணக்கூடாதென்றால் ! அந்த மனித மிருங்களின் அசுர அராஜகங்கள் அரங்கேற்றம் காணக்கூடாதென்றால்! சகோதரிகளுக்கு ஒரு அன்பான வேண்டுக்கோல்,உங்களின் தன்மானத்தையும், உங்களின் கௌரவத்தையும் நீங்கள் காக்க,
இது போன்ற கோமாளிகளிடம் தரம் பார்த்துப் பழக ஆரம்பியுங்கள்.பாரதிக் கண்ட புதுமை பெண்ணாக நீங்கள் ஏன் மாறக்கூடாது...பெண் விடுதலை வேண்டும் என்று முழங்கிய அந்த தெய்வக்கவிஞனின் வாக்கு இந்த மலாயா மண்ணில் பொய்யாகிவிட்டதா?????.

சகோதரிகளே ! நாளை இரவு இந்த மண்ணிற்கு கர்ப்பச் சுதந்திரம் கிடைத்த நாள்,ஆனால் அது பொய்யாகிவிட்டது!!!!!!!! பட்டப் பகலிலே, பலர் நடமாடும் இடத்திலே, ஒரு மிருகம், அந்த இரு பெண்களிடம் தன் கைவரிசையைக்காட்ட, மற்றொரு மிருகம் இதை ரசிக்க,பிரிதொரு மிருகம் ச்சி... ச்சி.. ச்சி!!!!..அது அதைவிட கேவலமான ஒன்று, பதிவு செய்ய,அரங்கேற்றம் கண்டது அந்த அவலச்சம்பவம், ஒருக்கால், அந்த இரு பெண்கள் அநாகரீகமான முறையில் நடந்துக்கொண்டிருக்கலாம் முழுமையான சம்பவம் தெரியாது, ஆனால் இது ஒரு விளைவின் எதிர்விளைவாகும்.காரணம் பகிரங்கமாக பட்ட பகலிலே இதை பதிவு செய்யக்கூடிய அளவிற்கு அவர்களின் உணர்ச்சிகள் தூண்டப் பட்டிருக்கின்றனவெற்றால், நிச்சயமாக அந்த ஆணாதிக்கத்தை காட்டிய மிருகம், ஏதோ ஒரு அதீத மன பாதிப்பிற்கு ஆளாகி இருக்கக் வேண்டும் .இதன் விளைவுத்தான் இந்த ஒளிப்பதிவு.
சகோதரிகளே ! இரண்டு விசயங்களை சிந்திக்க மறந்து விடாதீர்கள் "யாரும் இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டால் எல்லாம் சௌக்கியமே.." உங்களின் வரையறையை நீங்கள் தயவு செய்து வகுத்துக்கொள்ளுங்கள்,இரண்டாவது,நீங்கள் கோழைகள் அல்ல, மறந்து விடாதீர்கள், நினைத்தால், அவர்களையே நீங்கள் காலிலும் விழவைக்க முடியும்.பெண்ணுரிமைக்கு புறம்பான செயல் இது, இனியும் காலம் தாழ்த்தாது, பாவப்பட்ட அந்த இரு சகோதரிகளுக்கு உரிமை குரல் கொடுக்க ஒன்றுக்கூடுங்கள்.
சம்பவம் எதுவாகவே இருக்கட்டும் , முதல் குற்றம் அந்த பெண்ணை பகீரங்கமாக அறைந்தது,உதைத்து,இரண்டாவதுக் குற்றம் பொது இடத்தில் அந்த அராஜகத்தை புரிந்தது,மூன்றாவது குற்றம் "நீ ஒரு கற்புள்ளவளா" என்று வீதியிலே ஒரு பெண்ணின் தன்மானத்தை அவமானப்படுதியது.இது நிச்சயமாக மறுப்பரிசீலனைக்கு கொண்டுவரவேண்டிய சமுதாய பிரச்சனையாகும்.இன்றைக்கு இந்தப் பெண்கள், நாளைக்கு!!!! ஏன்! உங்கள் வீட்டுப்பெண்களாகக்கூட இருக்கலாம் அல்லவா?

இவர்கள் ஆபத்தான புல்லுருவிகள்,,என் தாய் தமிழச்சியே!!!! உன்னிடம் கருணைக்கு நிகரான ரௌத்திரமும் உண்டு, மறந்துவிடாதே,இந்த துரியோதனாதிகளை விட்டுவைக்காதே...களை எடுக்கப் புறப்படு....நாங்கள் உன் பின்னால் நிற்கின்றோம்.வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment