You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Sunday, August 15, 2010

உண்மை சகோதரனுக்கு உயிர் எழுதிய உரிமைக் காவியம்..

உயரத்திலோ குள்ளம், ஆனால் எதார்த்தத்தின் அகராதியில் இவனோர் சர்க்கரை வெல்லம்,
சிரித்தால் காண்பதுவோ இவனின் வெள்ளை உள்ளம்
பலரின் இதயமோ இவனுக்கு ஆனந்த இல்லம்....

தமிழ்பால் தாகம் கொண்டு, பல எதிர்ப்பால் உயர்வைக் கண்டவன்
தமிழ் வாழ, தமிழர் வாழ தன்னையே தமிழுக்கு தாரை வார்த்துக்கொண்டவன்
அந்தரங்கத்தில் இவன் எப்படியோ அரங்கத்திலும் அவன் அப்படியே,

பலர் வாழ, இவனின் நிழல் குடையாய் தாங்கியது ஒருப்புறம்
இவன் வாழ, பலரின் விரல்கள் விமர்சனங்களாய் இவனை
தீண்டி ரணப்படுத்தியது மறுப்புறம்...

தமிழனுக்கு உடன் பிறந்த பெருமைகள் பல இருப்பினும்,
தரணியிலே தொற்று நோயாய் ஒட்டிக்கொண்ட ஒன்று
"தானும் படுக்க மாட்டான் தரையையும் கொடுக்கமாட்டான்"
என்பதே தமிழனின் இடைக்காலச் சிறப்பு

இந்த உண்மைத்தமிழனின் அர்பணிப்பிற்கும் சேவைக்கும்,
அற்பத்தழிழனின் எத்தனை எத்தனை விமர்சனங்கள் !!!!!
இவன் வாய் ப்ரசங்கத்தின் வழி, எத்தனையோ ஏழைக்கு
வயிற்றுப்பசி தீர்ந்துக்கொண்டிருப்பதை யார் அறிவார்????

இதுக்கால் இவன் செய்த தொண்டு
தமிழ் தாய் மட்டுமே அறிவாள்,
மெய்பொருள் கண்டவன் இவன்,
ஒருப்போதும் கைப்பொருளை பற்றி இவனுக்கு இருந்ததில்லை கவலை...

ஓர் உண்மைத் தெரியுமா??எந்த ஒரு உண்மையாளனும்
நிகழ்காலத்து நிழலாகவே நிற்றிருப்பான்..அவன்
வாழும்காலத்தில் உலகம் அவனை அறிந்துக்கொண்டதில்லை
வரலாற்றின் கர்ப்பத்திலே இந்த உண்மைகள் உறங்கிக்கொண்டிருக்கின்றன....

காலத்தின் கட்டாயம் நீ பேச வேண்டும் என்று,
உன் அடிச்சுவடு பற்றி வந்த, எனக்கோ ! பேசி சலித்துவிட்டது,
அப்பப்பா !! போதும்...போதும் !!!!!
இந்த பாவி தமிழர்களின் மேல் நீ வைத்திருக்கும் பற்றிற்கு
அளவில்லை என்பதை, உன் பதினைந்து வருடக்கால வரலாறு
பதிவு செய்துவைத்திருக்கின்றது..

உன் மேல் எனக்கு நீண்ட ஒரு நாள் வருத்தம் உண்டு,
நீயும் நானும் ஒரு சாதி என்பதை நீ நன்றாகவே அறிவாய்
ஆதம் நபியின் வழித்தோன்றல் நீயும் நானும்,
நீ முந்தி நான் பிந்தி.....


ம்ம்ம்ம்!!!! என்ன வருத்தம் என்று நீ நினைக்கலாம்
வருத்தமே நீதானப்பா !!!!!!
உன் உயிர் படும் வேதனையை நான் அறிவேன்
என் உயிர் படும் வேதனையை நீ மட்டுமே அறிவாய்

உனக்கு உன் சேவை முக்கியம்தான் சந்தேகமில்லை
ஆனால் அதை விட எனக்கு நீதான் முக்கியம்
காரணம் ஏன் தெரியுமா??? ஓர்க்கால் நான் முந்திக்கொண்டால்
உன் சகோதரனை முறையாக அடக்கம் செய்ய இங்கு யாருக்கும் தெரியாதப்பா!!!!
பயித்தியத்தின் உடலுக்கு ஒரு பயித்தியம்தான் வயித்தியம்
பார்க்க வேண்டும் என்பது சூஃபியின் சூத்திரமாகும்..


உடலுக்கான இடைவெளியில் தூரம் இருக்கலாம்
நம் உயிர்களுக்கான தூரம், ஒருப்போதும் இருந்ததில்லை
சகோதரனே உன் உடலை பார்த்துக்கொள், எனக்கு நீ வேண்டும்...
"ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்" இது பலரின் திட்டம்..

வாழி நின்றன் தமிழ் தொண்டு
ஆழிப்போல் வற்றாத புகழ் உண்டு
காதரே உன் சேவைக்கண்டு
காளி என்றும் துணை நிற்பாள் தன் வாள் கொண்டு...

1 comment:

  1. Touching poem. Almighty blessings wif both of you always.

    ReplyDelete