You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Saturday, July 16, 2011

வழி உண்டு வாசலும் உண்டு.... மனம் உண்டா??


விதி அல்லது வினை என்பது உண்மையானால் அதை ஜெயிக்க முடியும் என்பதும் மிகப்பெரிய உண்மையாகும்.அதை வகுத்தவனே நீதானே ! உன்னுடைய எண்ணங்கள்தான் வினையாக செயல் வடிவம் எடுக்கின்றன என்று நீ முதலில் தெரிந்துக்கொள்.பாரம்பர்யமாக கையாண்டு வரும் குடும்ப நம்பிக்கைகள் எண்ணங்களாக கொள்கைகளாக மாறி பின் செயல்களாக வடிவெடுக்கின்றன.செயல்கள் நிகழும் பொழுது அது நம் பிரபஞ்சத்தில் ஓர் அழுத்தமான படிவத்தை ஏற்படுத்துகின்றது.அதே நேரத்தில் நமது சித்தம் என்று சொல்லும் மனதின் மிக சூக்கும நிலையிலும் பதிவை வைத்துக்கொள்கின்றது இதை இன்றைய விஞ்ஞானிகள் SOUL GENETIC என்று கூறுகின்றார்கள்.
பலப்பிறவிகளின் தொடர் எண்ணங்கள்தான் நாம் இப்போது வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற வாழ்க்கையாகும். அதைத்தான் நாம் விதி என்கின்றோம் ஆகவே நாம்தான் காரணகர்த்தா,நாம் நம் இன்றைய வாழ்வை வடிவமைத்த சிற்பி.ஆங்கிலேய விஞ்ஞான அறிவு belief system....thought patterns.....action என்று கூறுகின்றது அதாவது நம்முடைய ஆழ்நம்பிக்கைகள் எண்ணங்களாக பின் எண்ணங்கள் செயல்களாக மாறுகின்றன என்று வரையறுக்கின்றது.
நமது பலம் நம் மனம், நமது பலவீனம் அதை அறியாதிருப்பதேயாகும்.வாழ்க்கை எனும் கடலில் நம் கப்பல், காற்று அடிக்கும் திசையெல்லாம் போய்கொண்டிருக்கின்றது என்றால், மனம் எனும் பாய்மரத்தை நாம் பயன்படுத்த தவறிவிட்டோம் என்று அர்த்தம்.குறிப்பாக வாழ்க்கையில் விரக்தி FRUSTRATION,மன உளைச்சல் ANXITY,தோல்வி மனோபாவம்,தன்னம்பிக்கையின்மை ,
தாழ்வுமனோபாவம் INFERIORITY COMPLEX,அதிகாரமனோபாவம் SUPERIORITY COMPLEX, முற்சாய்வு PREJUDICE,தற்கொலை எண்ணங்கள் SUCCIDEL THOUGHTS,எண்ணச் சுழல்வு MOOD SWING இவை அடிக்கடி நம் மனதை தாக்கினாலோ அல்லது நம்மை தூண்டினாலோ நம் சிந்தனையில் எங்கோ தவறுகள் நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றன அல்லது மனோநிலையில் பாதிப்புக்கள் ஏற்பட்டுகொண்டிருகின்றன என்று நிச்சயமாக யூகித்துக்கொள்ளலாம்.
இங்கே கவனிக்கப்பட வேண்டிய விசயம் உங்களின் சூழல் ENVIRONMENTAL PRESURE,நண்பர்கள் வளையம் PEER PRESURE,கடந்தக்கால அனுபவ பதிவுகள் REGRESSION MEMORIES..இவைகள் நம் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றன,வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.இதற்கு சுய எண்ணப் பரிசோதனை SELF ANALYSIS செய்து வர இவற்றிலிருந்து விடுதலை பெறலாம் .
எண்ணங்கள் சரியாக செயல்பட்டால் வாழ்க்கை பூஞ்சோலையாக மாறும் இல்லை என்றால் போராட்டமே வாழ்க்கையாகிவிடும்...அது உங்களின் கைகளில்தான் உண்டு.!!!!

No comments:

Post a Comment