You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Sunday, September 12, 2010

உயிர் காதலிக்கு ஒரு கவிதை


என் தாய், இறுதிவரை வரமாட்டாள் என்பதை உணர்ந்து, அன்றே
உன்னை எனக்கு தாரமாக்கி விட்டாள் போலும் - உன்
பந்தம் உண்மையிலேயே கருவறையில் மலர்ந்த சொந்தமடி

நான் வாழ வேண்டுமென்று நீ துடித்த துடிப்பிற்கு
இதுவரை கணக்கு ஏதடி?
ஒரு முறையாவது உன்னை தொட்டிருப்பேனா
அல்லது "உயிரே,..இதயமே..என் காதலியே....." என்று
நலம் விசாரித்திருப்பேனா ?

என் வருகையை எதிர்பார்த்து எத்தனை நாள்
நீ ஏங்கியிருப்பாய்
காலம் முழுதும் உன்னை ஏங்கவைத்த
கேவலமான பாவியடி நான்...
சுயநலக்காரன் இவன், என்று தெரிந்தும்-நான்
வாழவேண்டுமென்று நீ துடித்தாய்

என் மீது எத்தனை காதல் தான் உனக்கு,
இறுதிவரை உன்னை துடிக்க விட்டபோதும்
என்னை நீ ஒரு போதும் நீ துடிக்க விட்டதில்லையே இதயமே!
போடி போடி பயித்தியக்காரி!!!!

உன் உயிர் துடிப்பை அந்த ஆண்டவன் மட்டுமே
அறிந்திருப்பான்
என்னை வாழவைத்த என் காதலியே...
என் உயிரே..... என் ஜீவனே....
காலதேவனின் ரெஜிஸ்டர் புத்தகம்
எனக்கு நாள் குறித்துவிட்டது

இதயமே !!!!!!!இதயமே !!!!! நான் வாழ நீ துடித்தாய்
நீ வாழ பாவி நான் ஒருபோதும் நினைந்ததில்லையே
மனம் திறந்து ஒன்றுக் கேட்கின்றேன்???
என்னை மன்னிப்பாய??? ஒருமுறையாவது
உன்னோடு என்னை அணைத்துக்கொள்வாயா???
உன் உயிரின் நாதத்தில் கலக்க இப்போதாவது
எனக்கு அனுமதிக்கொடு......please.....please.......please

அப்பாவி இதயமே!!!!!என் சொந்தமே!!!!
நான் உறங்கும் போதெல்லாம் நீ விழித்திருந்து, எனக்கு
உயிர் பிச்சை கொடுத்தாய்--ஆனால்
இன்று நீ துடிப்பதை நிறுத்தி விட்டாய் நான்
நிரந்தரமான உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன்.......

(எது இல்லை என்றால் காதல் இல்லையோ,உயிர் இல்லையோ
அந்த இதயத்திற்கு இந்த கவிதை சமர்ப்பணம்...காதலர்கள் தினத்தில், காதலை ரோஜாப்பூவால் பண்டமாற்று வியாபாரம் செய்யும் கோமாளிக்காதலர்களே, உங்களுக்கு ஒரு செய்தி ,ரோசாவிலும் மொன்மையானது இதயம் , அதையும் சற்று காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள், காரணம் அது தான் உங்கள் வாழ்க்கையின் ஜீவநாதம், உன்னை வாழவைக்கும் இதயத்தை முதலில் காதல் செய் அதன் உயிர் துடிப்பை உணர்வதற்கு முயற்சிசெய்...)

Saturday, September 11, 2010

The mystics of sound (நாதப்ரம்மம்)


Sound is the vibration of air molecules,which we measure by pulses per second,or hertz.The vibrationf of molecules create solidity,sound,colour,light and all living beings.Light vibrates at a very high frequency manu octaves above sound waves.White light is a frequency range(like sound) called the visible light spectrum (VLS),which breaks down into color.RED is the lowest frequency,violet the highest,and it goes
red,orange,yellow,green,blue,indigo,violet.This means you resonate with higher frequencies by wearing violet and lower frequencies by wearing red.
Which is why Saints wear violet robes and barflies wear red dresses.THese simple octives underlie all matters;Everything is made of vibrations.Once this is fully comprehended,it makes sense that the many dimentions could form in planes where certain frequencies vibrate.We cannot see or hear extremely high dimentions,just as we cannot hear sound much above the range of the piano keyboard.But literally anything could be vibrating in these higher zones,but such things would not be physical as we are in 3D.

Friday, September 3, 2010

ஈழத்து தமிழச்சிக்கு எங்களின் உயிர் வணக்கங்கள்


பூமி பந்தில் சற்று வித்தியாசமான தாய்மார்கள் இவர்கள்,
குழந்தைகளை பெற்றுக்கொண்டதனாலேயே, தாய்மை பதவி அடைந்துவிட்டவர்களைதான்
இதுவரை உலகம் அறிந்திருக்கும், இது காமத்தின் கட்டாய சொகுசு
காலதேவனுக்கு இரையாகப்போகும் பரிசு -ஈழத்து தமிழச்சி
தமிழ் உணர்வையும் வீரத்தையும் ப்ரசவித்துவிட்டு
கன்னிகளாகவே உயிர் துறந்தவர்கள்,
கன்னித்தாய்மார்களே!!! மீண்டும் ஒரு பிறவிவாய்த்தால்
உங்கள் கருவறையில் ஒரு முறையாவது
படுத்துறங்க வாய்ப்புகொடுங்கள்....
அப்படியாவது இனி எங்களுக்கு தமிழ் உணர்வும்
வீரமும் பதியட்டும்..அடிமை விதி மடியட்டும்.....
எங்களின் உயிர் வணக்கங்கள்........

Sunday, August 29, 2010

பெண் விடுதலை வேண்டும்!!!!!!!!


நடந்தது என்ன? தோழர்களே !அந்த (face book) ஒளிப்பதிவை பார்க்கும் பொழுது, இது எதார்த்தமாக நடந்த ஒரு அவல சம்பவமாகவே தெரிகிறது.சில விசயங்களை நாம் சற்று நிதானித்துப் பார்த்து, இதற்கு ஒரு கட்டாய முடிவை, எடுத்தே ஆகக்கூடிய நிர்பந்தத்தில் இருக்கின்றோம்....செய்த செயல் கண்டிப்பாக கண்டனத்திற்குரியதும் விசாரணைக்குரியதுமாகும்...இனி இந்த நாய்களின் செயல் மீண்டும் சபைக்காணக்கூடாதென்றால் ! அந்த மனித மிருங்களின் அசுர அராஜகங்கள் அரங்கேற்றம் காணக்கூடாதென்றால்! சகோதரிகளுக்கு ஒரு அன்பான வேண்டுக்கோல்,உங்களின் தன்மானத்தையும், உங்களின் கௌரவத்தையும் நீங்கள் காக்க,
இது போன்ற கோமாளிகளிடம் தரம் பார்த்துப் பழக ஆரம்பியுங்கள்.பாரதிக் கண்ட புதுமை பெண்ணாக நீங்கள் ஏன் மாறக்கூடாது...பெண் விடுதலை வேண்டும் என்று முழங்கிய அந்த தெய்வக்கவிஞனின் வாக்கு இந்த மலாயா மண்ணில் பொய்யாகிவிட்டதா?????.

சகோதரிகளே ! நாளை இரவு இந்த மண்ணிற்கு கர்ப்பச் சுதந்திரம் கிடைத்த நாள்,ஆனால் அது பொய்யாகிவிட்டது!!!!!!!! பட்டப் பகலிலே, பலர் நடமாடும் இடத்திலே, ஒரு மிருகம், அந்த இரு பெண்களிடம் தன் கைவரிசையைக்காட்ட, மற்றொரு மிருகம் இதை ரசிக்க,பிரிதொரு மிருகம் ச்சி... ச்சி.. ச்சி!!!!..அது அதைவிட கேவலமான ஒன்று, பதிவு செய்ய,அரங்கேற்றம் கண்டது அந்த அவலச்சம்பவம், ஒருக்கால், அந்த இரு பெண்கள் அநாகரீகமான முறையில் நடந்துக்கொண்டிருக்கலாம் முழுமையான சம்பவம் தெரியாது, ஆனால் இது ஒரு விளைவின் எதிர்விளைவாகும்.காரணம் பகிரங்கமாக பட்ட பகலிலே இதை பதிவு செய்யக்கூடிய அளவிற்கு அவர்களின் உணர்ச்சிகள் தூண்டப் பட்டிருக்கின்றனவெற்றால், நிச்சயமாக அந்த ஆணாதிக்கத்தை காட்டிய மிருகம், ஏதோ ஒரு அதீத மன பாதிப்பிற்கு ஆளாகி இருக்கக் வேண்டும் .இதன் விளைவுத்தான் இந்த ஒளிப்பதிவு.
சகோதரிகளே ! இரண்டு விசயங்களை சிந்திக்க மறந்து விடாதீர்கள் "யாரும் இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டால் எல்லாம் சௌக்கியமே.." உங்களின் வரையறையை நீங்கள் தயவு செய்து வகுத்துக்கொள்ளுங்கள்,இரண்டாவது,நீங்கள் கோழைகள் அல்ல, மறந்து விடாதீர்கள், நினைத்தால், அவர்களையே நீங்கள் காலிலும் விழவைக்க முடியும்.பெண்ணுரிமைக்கு புறம்பான செயல் இது, இனியும் காலம் தாழ்த்தாது, பாவப்பட்ட அந்த இரு சகோதரிகளுக்கு உரிமை குரல் கொடுக்க ஒன்றுக்கூடுங்கள்.
சம்பவம் எதுவாகவே இருக்கட்டும் , முதல் குற்றம் அந்த பெண்ணை பகீரங்கமாக அறைந்தது,உதைத்து,இரண்டாவதுக் குற்றம் பொது இடத்தில் அந்த அராஜகத்தை புரிந்தது,மூன்றாவது குற்றம் "நீ ஒரு கற்புள்ளவளா" என்று வீதியிலே ஒரு பெண்ணின் தன்மானத்தை அவமானப்படுதியது.இது நிச்சயமாக மறுப்பரிசீலனைக்கு கொண்டுவரவேண்டிய சமுதாய பிரச்சனையாகும்.இன்றைக்கு இந்தப் பெண்கள், நாளைக்கு!!!! ஏன்! உங்கள் வீட்டுப்பெண்களாகக்கூட இருக்கலாம் அல்லவா?

இவர்கள் ஆபத்தான புல்லுருவிகள்,,என் தாய் தமிழச்சியே!!!! உன்னிடம் கருணைக்கு நிகரான ரௌத்திரமும் உண்டு, மறந்துவிடாதே,இந்த துரியோதனாதிகளை விட்டுவைக்காதே...களை எடுக்கப் புறப்படு....நாங்கள் உன் பின்னால் நிற்கின்றோம்.வாழ்த்துக்கள்

அம்பிகையை வழிப்பட எளிய முறை மந்திரங்கள்

ஓம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதியின் தாயே அம்பிகே போற்றி போற்றி
ஓம் ஹ்ரீம் க்லீம் அவ்வும் சௌவும் சரஹணபவ சயிலொளிபவ ஆறுமுகபவ ஆறுபடை உடையோனின் ஆனந்தத் தாயே போற்றி போற்றி
ஓம் நமசிவய ,யநமசிவ, வயநமசி, சிவயநம, மசிவயந எனும் மூலமந்திர மாணிக்கம் பரமசிவனின் பக்கம் அமர்ந்த அன்னையே போற்றி போற்றி
ஓம் நமோ நாராயணா என்ற அஷ்டாட்ச்ஷரத்தை அங்கமாகவுடைய அச்சுதனின் கூடப்பிறப்பே போற்றி போற்றி
ஓம் வங் யங் மங் நங் சிங் என்று ஓதுவார் தன்முன் இருந்து அருளும் ஆட்சி பொருளே அன்னையே போற்றி போற்றி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மாங்கல்ய லஷ்மி மோஹினி சர்வ ரஷாம்பிகையே தாயே போற்றி போற்றி
ஓம் மங்களே மங்களதாரே மாங்கல்யே மங்களப்ரதே மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே சதா

Sunday, August 22, 2010

REALITY


The Easterners core theory of spirituality is reaching the true consciousness within, called SATH CHIT ANANDA, Sath means truth,Chit means consciousness and Ananda means bliss.This is the only ultimate aim for an aspirant to walk on the path of spiritual.


When the true searching starts within one self, he will indulge into him self, with the enquiry of who,what, and why ?why i am here?who am i?what is the purpose of this life?someone when to Bhagawan Buddha and asked him, who are you?Buddha was keeping silent, and he started asking him, are you a Sadhu?replied no, are you a Nyani?replied no, are you a human? replied no,than he got irritates and ask Buddha are you an animal?Buddha said no.He got annoyed and shouted at Bhagawan, than who the hell you are?


Bhagawan Buddha replied, I'm a total awareness, just mirroring each and everything....!!!!While In the process of inner searching the aspirant will find the master who had been in the path of Sadhana and attained the wisdom .Those are the great people called Sathguru.A dogma in this spiritual philosophy is "stop looking for the path and become the path"simply means, stop searching for the master while search for your self. In this persistant journey , one may find the right spiritual master and with his guidance, you may elevate to the higher dimensions .
"தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை....."
"தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே"
means know Thy Self....

We are aware of many things happening surrounding us.How many of us aware of ourselves?We are not human being with spiritual experiences but spiritual beings with human experience. How many of us aware of this ideal statement???Each human has created in such away, whereby he can creates whatever he wants or manifest, never to other living beings on the Earth.A precious Gold mining has left abandoned many-many births abroad.


Hey man! i understood what you are saying, but than where do i starts..?Do i need to look for the Guru,do i need to become a vegetarian,do i need to trivialize my surroundings or do i need to go to Himalayas?The only criteria which can lead to the ultimate truth is the utmost thirst of self enquiry.Without this thirst of self searching ,you may not find any purpose of the great masters in your live journey.Many of them are manipulating the royal ideal path of spiritual without knowing the real essence ."When the student is ready the master will appear" simple as it.......prepare our self towards the journey instead of searching for Guru's or wasting our time running behind them.Understand something, the real masters don't like the followers, because their existence on the earth merely to make you as an enlightenment beings so that you can light thousands and thousand for others.MANY out there are in the comfort zone of being followers instead of understanding the REALITY.


If he goes off, than we tend to look for the other person to comfort us.How long do we tentatively going to do this ?Its going to be an endless journey indeed, because we have already mesmerized by someone unconsciously and we lost our individuality and identity.So dependent will remain certain, when dependent dominates you, there you go!! very subliminal slavery thoughts starts acquiring within you and starts slashing you from the total independent or WISDOM.........Its occurred very subliminally to most of us without our consent,result???? we become the blind in the dark room with thousands and thousands uncertain thoughts and dilemma's forever.A life full of questions and unsettled business !!!!! Is this our reality???
Here to remind you again...A great awareness,peace,silent and bliss is hiding in you ,go back to you nature...BY NATURE ALL, ARE A BUDDHA, BUT WITH OUR IGNORANCE WE NURTURED OUR LIVES INTO MISSERIES..........!!!!! love all....

Thursday, August 19, 2010

வரும் முன் காப்பது அறிவு


வசதி இருக்கக் கூடியவர்கள் முடிந்தால் வாரம் இருமுறை வராட்டி,மருதாணி மரத்து விதை,வேப்பமரத்து காய்ந்த இலை சிறிது பச்சைக்கற்பூரம்
இவற்றுடன் மஞ்சள் பொடியைக் கலந்து வீடு முழுவதும் புகை போட்டால் காற்றில் பரவி வரும் நச்சுக்கிருமிகள் சாகும்.தற்பொழுது மனித இனத்தை பயமுறுத்திக்கொண்டிருக்கும் H1NI மற்றும் INFLUANZA A TYPE B TYBE இந்த தொல்லையிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.கைகண்ட அனுபவமுறையாகும்..உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்ளுங்கள்..

.