

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிட தீவினை மாளும்
சிவ சிவ என்றிட தேவரும் ஆவர்
சிவ சிவ என்ன சிவகதித் தானே {திருமந்திரம்}
சிவ சிவ என்கின்ற நாமத்தை சதா ஜெபம் செய்துக்கொண்டிருந்தால்
வினைகள் அழியும் என்கின்றது திருமந்திரம்..வரும் 22ம் தேதி காலை ஏறக்குறைய 3.15 தொடங்கி 5.00 மணி வரை நம் பூமியில் ஒரு
மிக விஷேஸமான ஒரு நிகழ்வு நடக்க உள்ளது அதை நம் முன்னேர்கள் சிவபெருமானின் ஆனந்த தாண்டவம் என்கின்றார்கள் அல்லது ஆதிரை திருநாள் அல்லது ஆருத்ரா தர்சனம் என்றும் அழைப்பார்கள்.தமிழ் நாட்டில் சிதம்பரமாகிய ஆகாச பூத ஸ்தலத்தில் இந்த நிகழ்வு வருடாவருடம் நடைப்பெருகின்றது.விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்தால் இன்றைய தினம் நம் வானவெளியில் திருவாதிரை நட்சத்திர மண்டல விண்மீகள்,பூமி மற்றும் நிலவு ஒரு கோட்டில் தன் சஞ்சாரத்தின் போது நிற்கும்,இது வடகிழக்கு திசையில்
நிகழும்..புராண ரீதியாக பார்த்தால் வடகிழக்கு திசையில்தான் சத்தியலோகம் இருப்பதாக கூறுகின்றார்கள்.அன்று மிக அதீதமான அருட்காந்த சக்தி நமது பூமியை நோக்கி வரதொடங்குகின்றது,அன்றைய தினம் நாம் தியானம் மற்றும் மந்திர ஜபங்களை செய்ய ஆரம்பித்தல் நமது முன் வினைகள் நீங்கும் என்று சித்தர்பெருமக்கள் கூறுகின்றார்கள்...மேலே இருக்கும் படம் நமது வானவெளியில் அன்றைய தினம் திருவாதிரை நட்சத்திரக் கூட்டத்தின் அமைப்பாகும்..சற்று ஆழமாக அதை உள்னோக்கிப்பார்த்தால் சிவப்பெருமானின் ஆனந்த தாண்டவ அமைப்பை காணமுடியும் இது நாசா விஞ்ஞானிகளால் எடுக்கப்பட்ட படமாகும்....இன்னும் நிறைய உண்டு பிறகு ஒரு நாள் விரிவாகப் பார்ப்போம்....
No comments:
Post a Comment