
“சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகம் செயும்நாள்
வாகா முருகா மயில்வாகனனே
யோகா சிவஞான உபதேசிகனே” {கந்தர் அனுபூதி}
முருகா !!!! நான் சிறியவன், வழியறியேன், எமன் என்னை கைபற்றும்முன் நீ என் கரம் பற்றி உன் திருவடிகளிலே என்னை சேர்த்துக்கொள்,இந்த ஏழைக்கும் சிவஞானயோகத்தை உபதேசம் செய் என்று உயர்ந்த உயிர் பிச்சையை நமக்காக வேண்டுகின்றார் ஆசான்.அருண்கிரியார்.
புராண வரலாறு ஈசனின் நெற்றிக்கண்ணில் கந்தன் உதித்ததாக கூறுகின்றது,ஆணும் பெண்ணும் ஸ்பரிசமாகமல் தோன்றியவன் முருக்கடவுள்..யோக மார்க்கத்தில் தன் ஜீவசத்தாகிய விந்தை கட்டியவர்களுக்கு சுவாசம் மேல்கதியாக ஊர்த்துவகதி ஏற தொடங்கும் அப்பொழுது சுழுமுனைவாசல் என்கின்ற நெற்றிக்கண் திறக்கும் இதற்கு லலாட சக்கரம் என்றும் ஒரு பெயர் உண்டு.மீண்டும் புராணத்திற்கு வருவோம், சிவப்பரம்பொருள் ஒரு தருணம் காமனை எரித்ததாக ஒரு செய்திவரும்.இதன் சூக்குமம், ஒரு காலத்திற்கு பிறகு, காமத்தீயை யோகத்தீயாக மாற்றினால் ஞான வாசல் திறக்கும் என்பது ரகசியமாகும்.
இந்த இடம் கந்தப்புராணத்தின் ஒரு உச்சம்......கைலாயங்கிரிநாதனை தரிசிக்க வேண்டி ப்ரம்மதேவர் கைலைக்கு செல்கின்றார், அப்பொழுது அங்கு வீரபாகு தேவர்களுடன் முருகப்பெருமான் வழியில் அமர்ந்திருக்கின்றார். முருகப்பெருமான் ப்ரம்மாவைப்பார்த்து ஸ்வாமி வணக்கம் என்கின்றார் அதற்கு ப்ரம்மா கண்டும் காணாதவர் போலே தொடர்ந்து கைலையை நோக்கி நடக்கின்றார்.இந்த செய்கை முருகப்பெருமானுக்கு அதிசயத்தை உண்டு பண்ணியது.சிலகாலம் பொறுத்து ப்ரம்மா மீண்டும் அந்த வழியை கடக்கின்றார் பரமேஸ்வரனை தரிசனம் செய்துவிட்டு.
முருக்கடவுள் மீண்டும் வணக்கம் ஸ்வாமி என்கின்றார் அப்பொழுதும் ப்ரம்மா தலையை மட்டும் அசைத்துவிட்டு இருமாப்புடன் தன் நடையை தொடர்கின்றார்.அக்கினியில் பிறந்தவன் ஆயிற்றெ ஆறுமுகப்பெருமான்,வந்ததே கோபம்......
முருகப்பெருமான் :- ஸ்வாமி சற்று நில்லுங்கள்,யார் நீங்கள்
ப்ரம்மா :- என்ன வேடிக்கையாக இருக்கின்றது என்னையா யார்
என்று கேட்கின்றாய்?
ப்ரம்மா :- நாம் படைத்தல் தொழில் புரியும் கடவுள்
முருகப்பெருமான் :- அப்படியா சரி ,அப்படி என்றல் உங்களின் தகுதிதான்
{qualification} என்ன?
ப்ரம்மா :- நாம் சகல வேதசாஸ்திரங்களையும்
கற்றுத்தேறியுள்ளோம்
முருகப்பெருமான் :- ஓ!! ஆகட்டும், அப்படி என்றால் படைப்பிற்கு மூலம்
எது ?
ப்ரம்மா :- படைப்பிற்கு மூலம் ஓங்காரம், ஓங்காரத்தை வைத்தே
அனைத்தையும் படைக்கின்றேன்
முருகப்பெருமான் :- அப்படி என்றால் ஓம்காரத்திற்கு அர்த்தம் கூறும்...
{ இதில் ஒரு வேடிக்கை உள்ளது, ஓம்காரமே ஓங்காரத்திற்கு அர்த்தம் கேட்கின்றது }
ப்ரம்மா விழிக்கின்றார், முருகன் ப்ரம்மாவை சிறைவைகின்றார்.
படைத்தல் தொழில் ஸ்தம்பித்து விடுமோ என்று தேவர்கள் அஞ்சி சிவப்பெருமானிடம் முறையிடுகின்றார்கள்.கைலாயநாதன் முருகனை நோக்கி வருகின்றார்.
ஈசன் :- அப்பா ! ஏன் நான்முகனை சிறைவைத்தாய் ?
கந்தக்கடவுள் :- அவன் தொழில் தகுதியில்லாமல் படைப்புத்தொழிலை
ஆற்றுகின்றான் ஆகையால்தான் அவனை சிறைவைத்தேன்
தந்தையே, மேலும் தொடர்கின்றார்.. அப்பா நீரில் குளிக்கும்
முன்பு உடலில் அழுக்கிருக்கலாம் ஆனால் குளித்தப்பின்பும்
அழுக்கு இருக்கின்றதென்றால் அந்த நீரை
அவமதிப்பதாக தானே அர்த்தம் அதுப்போல
இறைவனாகிய உன்னை பார்ப்பதற்கு முன் ஆணவம்
இருக்கலாம் ஆனால் உன்னை வழிப்பட்டு
தொழுதப்பிறகு ஆணவம் அஹங்காரம் எல்லாம்
அழிந்திருக்க வேண்டுமே அதுத்தானே வழிப்பாட்டின்
அடிப்படை உண்மை ஆனால் இறைவனாகிய உங்களைப்
பார்த்தப்பிறகும் தனக்கு ஆணவம் தலைகணத்து நின்றதே
அதன் காரணமாகத்தான் நாம் அவரை சிறைவைத்தோம்
தந்தையே........ என்றார் தகப்பன்சாமி !!!
ஈசன் அப்பா ஏன் நான்முகனை சிறைவைத்தாய்
கந்தக்கடவுள் அவன் தொழில் தகுதியில்லாமல் படைப்புத்தொழிலை
ஆற்றுகின்றான் ஆகையால்தான் அவனை சிறைவைத்தேன்
தந்தையே, மேலும் தொடர்கின்றார்.. அப்பா நீரில் குளிக்கும்
முன்பு உடலில் அழுக்கிருக்கலாம் ஆனால் குளித்தப்பின்பும்
அழுக்கு இருக்கின்றதென்றால் அந்த நீரை
அவமதிப்பதாக தானே அர்த்தம் அதுப்போல
இறைவனாகிய உன்னை பார்ப்பதற்கு முன் ஆணவம்
இருக்கலாம் ஆனால் உன்னை வழிப்பட்டு
தொழுதப்பிறகு ஆணவம் அஹங்காரம் எல்லாம்
அழிந்திருக்க வேண்டுமே அதுத்தானே வழிப்பாட்டின்
அடிப்படை உண்மை ஆனால் இறைவனாகிய உங்களைப்
பார்த்தப்பிறகும் தனக்கு ஆணவம் தலைகணத்து நின்றதே
அதன் காரணமாகத்தான் நாம் அவரை சிறைவைத்தோம்
தந்தையே........ என்றார் தகப்பன்சாமி
இன்று வழிப்பாட்டின் நிலை நாட்டாமைக்கும் தலைவர்களுக்கும் இறைவன் காக்க வேண்டிய அவலம், நல்ல வேலை முருகப்பெருமான் தற்பொழுதும் தன் சுட்டிதனத்தை தொடர்ந்திருந்தால் பல தலைவர்கள்
சிறைசாலைகளில் அடைக்கப்பட்டிருப்பார்கள்.
இப்படியாக பல உண்மைகள் முருக வழிப்பாட்டில் பொதிந்துள்ளது
முருகனின் பெயரிலேயே அத்துனை ரகசியம் அமைந்துள்ளது, முருகு
{மு} மெல்லினம் ரு இடையினம் கு வல்லினம் தமிழ் த வல்லினம் மி மெல்லினம் ழ் இடையினம், இது முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள உயிர் பந்தமாகும் மேலும் முருகா என்பதை கடை எழுத்து
மாற்றினால் காமுரு என்று வரும்..இதை காமுரு..காமுரு..காமுரு என்று தொடர்ந்தால் போல் கூறினால் முருக முருக முருக என்று ஒலிக்கும்.காமுருதல் ஆசைபடுதல் என்று அர்த்தம் கொள்ளலாம்..திருமூலப்பெருமான் கூறுவதுப்போல் “ஆசை விட விட ஆனந்தமாமே.....”ஒரு விந்தைப் பாருங்கள், பழனி முருகன் ஆண்டிக்கோலம் உடையவன், எதுவுமே வேண்டாம் என்று சென்றவன் ,ஆனால் அவனை நாடித்தான் கோடிக் கோடியாக சொத்து குவிகின்றது..எதுவும் வேண்டாமென்றால் எல்லாம் வரும் சூத்திரத்தை அறிந்தவன் அவன் ஒருவனே..அதுமட்டுமல்ல அவனை
உளமாற உயிராக வழிப்படுபவர்களுக்கும் அவன் அந்த சூக்குமத்தை உணர்த்துகின்றான்..அகத்திய பெருமான் தொடங்கி 1940 களில் வாழ்ந்த தவராஜசிங்கம் சித்தயோகி சிவானந்த பரமஹம்சர் அதன் பின் வாரியார் ஸ்வாமிகள் வரையிலும் அந்த சூத்திரத்தை அறிந்தவர்களாவார்கள்.
அகத்தியருக்கு தன்னையே தமிழாக்கிக் தந்தவன்,அருணகிரிக்கு வாய்மணக்கும் சந்தத்தமிழை கொடுத்தவன்,குமரகுபரருக்கு பிள்ளைத்தமிழாய் கந்தர்கலிவெண்பாவை பாடவைத்தவன்,தேவராயா ஸ்வாமிகளுக்கு நாளும் காக்கும் சஷ்டிகவசத்தை அருளியவன்,இந்தக்காலக்கட்டத்தில் ஏதாகிலும் அற்புதம் நடைபெற்றுள்ளதா என்று கேட்கின்றீர்களா? சத்தியமாக உண்டு,
இம்மலை திருநாட்டில் இலைமறை காயாய் வாழ்ந்துவரும் மூத்தத் தமிழறிஞர் ஆன்மீக சித்தாந்த சாகரம், சாக்தஸ்ரீ. டாக்டர்.சி.ஜெயபாரதி அவர்கள் முருக வழிபாட்டில் பல அனுபவங்களையும் அற்புதங்களையும் கண்டவர்கள்.ஆயக்கலைகள் 64ல் ஏறக்குறைய 30 கலை நுட்பங்களை முருகப்பெருமானின் அருளால் கிடைக்கப்பெற்றவர்.அடியேன் பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த ஓர் உண்மைத் சன்னியாசி {சர்வ நாசம் சன்னியாசம் ஆனால் இன்று சன்னியாசிகள் தான் ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கிகிடக்கின்றார்கள் இது கலியுக கன்றாவி போலும்} அவர் குண்டலினி யோகியும் கூட ஆவார் 50களில் கதிற்காமம் செல்ல வழித்தடுமாறியப்போது வயதான கிழவனாக தோன்றி பாதை காட்டி மறைந்த அற்புதம்,இப்படி பல பல உண்டு..
வரும் தைபூச நன்னாளிள் கந்தவேள் பெருமானை நினைந்துருகி ஆர்பாட்டாமில்லாமல் ஆடம்பரமில்லாமல் உண்மைசரணாகதியுடன் அவனை நினைந்து கண்ணீர் விட்டு அழைத்துப்பாருங்கள் வேலும் மயிலும் உடன் வருவதை உண்மையாய் உணர்வீர்கள்...
.
உபதேசம் பெறவோ அல்லது ஞானதீக்கை பெறவோ இரண்டு ஒளி நாட்களை திருமூலப்பெருமான் தம் திருமந்திரத்திலே குறிப்பிடுகின்றார் ஒன்று தைபூசம் மற்றொன்று வைகாசி விசாகம் ஆகையால் வருகின்ற தைபூச நாளன்று முருகனின் சன்னிதானத்திலோ அல்லது தாயின் ஆசியுடனோ கீழ்கண்ட மந்திரத்தை ஜபிக்க தொடங்குங்கள் செந்திற்பெருமான் எமன் வரும் வேளை சக்திவேல்கொண்டு உடன் வந்து அணைப்பது உறுதி ..
ஓம் ஐம் ரீம் வேல் காக்க காக்க இது பாம்பன் சுவாமிகள் அருளிய அதி அற்புதம் வாய்ந்த கவச மந்திரமாகும்
சிவனும் இவனும் ஒன்று-உயர்
சிந்தை செய்பவர் தமக்குள்
ஆனந்தமாய் ஒளிர்{வான்}- உயிர்
உச்சிவெளி தனக்குள் நின்று