You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Tuesday, October 5, 2010

மனத்துக்கண் மாசிலன்....



பொதுவாக தூய்மையை விரும்பாத மனிதர்களே இல்லை என்று நாம் கூறலாம்.மனிதன் எதிலும் எங்கும் சுத்தத்தை விரும்பக் காரணம் தூய்மை இன்பமயமானது ஆனந்தமயமானது.உடையில் சுத்தம்,படுக்கும் அறையில் சுத்தம்,வாகனத்தில் சுத்தம்,ஆபீஸ் அறையில் சுத்தம்,உணவு உட்கொள்ளச்செல்லும் உணவகங்களிலும் கூட சுத்தமானதையே நாடி போகின்றோம்...சுத்தம்..சுத்தம்..சுத்தம்..! "சுத்தம் சுகம் தரும்" என்கின்ற பழமொழிக்கூட உண்டு.மனிதன் இயற்கையிலேயே இதன் வசம் இருக்கின்றான்.
அசுத்தம் உள்ள இடத்தை மனம் சிறிதும் நாடாது..ஆக ஆறறிவு மனிதன், தூய்மையை எப்படி நாடி ஈர்க்கப்படுகின்றானோ, அப்படியே! பேரறிவாகப்பட்ட இறைவன்
தூய்மையான உள்ளத்தை நோக்கி வருகின்றான்...இப்பொழுது கூறுங்கள் கடவுளை அடைய ஏன் சிரமப்படுவானேன்......பௌதிகப்பொறியியல்{physics} விஞ்ஞானத்தில் காலியான இடத்தை நோக்கி சக்திப் பாய்கின்றது என்று கூறுகின்றார்கள்...இது உண்மையாக இருப்பின், மெய்ஞான விஞ்ஞானத்தில் காலியான மனதில், கள்ளகபடமற்ற மனதில், ஏன் இறைசக்தி ஈர்க்கப்படாது?????உள்ளே குப்பைகளை வைத்துக்கொண்டு எத்தனை ஆன்மீக அடையாளங்களை அணிந்துக்கொண்டாலும் பயின்றாலும் என்ன பயன்?
இதை வள்ளுவப்பெருந்தகை இப்படிக் கூறுகின்றார் "மனத்துக்கண் மாசிலன் ஆதலால் அனைத்தறன் ஆகுல நீரப் பிற" மனத்திலே மாசுக்கள் இல்லாத தன்மையே எல்லா
அறத்திற்கும் தலையாயது....

No comments:

Post a Comment