
மரணத்தை நோக்கிய மனித வாழ்வில்
எத்தனை எத்தனை மர்மங்கள்?
மாதவத்தோர் மரித்தல் அவலம் என்கின்றார்கள்,
மானிடரோ மரணம் சாஸ்வதம் என்று வாதிக்கின்றார்கள்
மரணமாகட்டும் மஹாசமாதியாகட்டும்
மனிதனே இப்பொழுது உன் நிலை என்ன?
இந்த நிமிடம் உன்னை கடந்துச் சென்றுவிட்டால்
நீ மரித்துவிட்டாய்..
இந்த நிமிடத்தில் நீ வாழ்கின்றாய் என்றால்
நீ மரணத்தையும் மாய்த்துவிட்டாய் !!!!!!!
No comments:
Post a Comment