You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Sunday, August 29, 2010

பெண் விடுதலை வேண்டும்!!!!!!!!


நடந்தது என்ன? தோழர்களே !அந்த (face book) ஒளிப்பதிவை பார்க்கும் பொழுது, இது எதார்த்தமாக நடந்த ஒரு அவல சம்பவமாகவே தெரிகிறது.சில விசயங்களை நாம் சற்று நிதானித்துப் பார்த்து, இதற்கு ஒரு கட்டாய முடிவை, எடுத்தே ஆகக்கூடிய நிர்பந்தத்தில் இருக்கின்றோம்....செய்த செயல் கண்டிப்பாக கண்டனத்திற்குரியதும் விசாரணைக்குரியதுமாகும்...இனி இந்த நாய்களின் செயல் மீண்டும் சபைக்காணக்கூடாதென்றால் ! அந்த மனித மிருங்களின் அசுர அராஜகங்கள் அரங்கேற்றம் காணக்கூடாதென்றால்! சகோதரிகளுக்கு ஒரு அன்பான வேண்டுக்கோல்,உங்களின் தன்மானத்தையும், உங்களின் கௌரவத்தையும் நீங்கள் காக்க,
இது போன்ற கோமாளிகளிடம் தரம் பார்த்துப் பழக ஆரம்பியுங்கள்.பாரதிக் கண்ட புதுமை பெண்ணாக நீங்கள் ஏன் மாறக்கூடாது...பெண் விடுதலை வேண்டும் என்று முழங்கிய அந்த தெய்வக்கவிஞனின் வாக்கு இந்த மலாயா மண்ணில் பொய்யாகிவிட்டதா?????.

சகோதரிகளே ! நாளை இரவு இந்த மண்ணிற்கு கர்ப்பச் சுதந்திரம் கிடைத்த நாள்,ஆனால் அது பொய்யாகிவிட்டது!!!!!!!! பட்டப் பகலிலே, பலர் நடமாடும் இடத்திலே, ஒரு மிருகம், அந்த இரு பெண்களிடம் தன் கைவரிசையைக்காட்ட, மற்றொரு மிருகம் இதை ரசிக்க,பிரிதொரு மிருகம் ச்சி... ச்சி.. ச்சி!!!!..அது அதைவிட கேவலமான ஒன்று, பதிவு செய்ய,அரங்கேற்றம் கண்டது அந்த அவலச்சம்பவம், ஒருக்கால், அந்த இரு பெண்கள் அநாகரீகமான முறையில் நடந்துக்கொண்டிருக்கலாம் முழுமையான சம்பவம் தெரியாது, ஆனால் இது ஒரு விளைவின் எதிர்விளைவாகும்.காரணம் பகிரங்கமாக பட்ட பகலிலே இதை பதிவு செய்யக்கூடிய அளவிற்கு அவர்களின் உணர்ச்சிகள் தூண்டப் பட்டிருக்கின்றனவெற்றால், நிச்சயமாக அந்த ஆணாதிக்கத்தை காட்டிய மிருகம், ஏதோ ஒரு அதீத மன பாதிப்பிற்கு ஆளாகி இருக்கக் வேண்டும் .இதன் விளைவுத்தான் இந்த ஒளிப்பதிவு.
சகோதரிகளே ! இரண்டு விசயங்களை சிந்திக்க மறந்து விடாதீர்கள் "யாரும் இருக்கும் இடத்தில் இருந்துக்கொண்டால் எல்லாம் சௌக்கியமே.." உங்களின் வரையறையை நீங்கள் தயவு செய்து வகுத்துக்கொள்ளுங்கள்,இரண்டாவது,நீங்கள் கோழைகள் அல்ல, மறந்து விடாதீர்கள், நினைத்தால், அவர்களையே நீங்கள் காலிலும் விழவைக்க முடியும்.பெண்ணுரிமைக்கு புறம்பான செயல் இது, இனியும் காலம் தாழ்த்தாது, பாவப்பட்ட அந்த இரு சகோதரிகளுக்கு உரிமை குரல் கொடுக்க ஒன்றுக்கூடுங்கள்.
சம்பவம் எதுவாகவே இருக்கட்டும் , முதல் குற்றம் அந்த பெண்ணை பகீரங்கமாக அறைந்தது,உதைத்து,இரண்டாவதுக் குற்றம் பொது இடத்தில் அந்த அராஜகத்தை புரிந்தது,மூன்றாவது குற்றம் "நீ ஒரு கற்புள்ளவளா" என்று வீதியிலே ஒரு பெண்ணின் தன்மானத்தை அவமானப்படுதியது.இது நிச்சயமாக மறுப்பரிசீலனைக்கு கொண்டுவரவேண்டிய சமுதாய பிரச்சனையாகும்.இன்றைக்கு இந்தப் பெண்கள், நாளைக்கு!!!! ஏன்! உங்கள் வீட்டுப்பெண்களாகக்கூட இருக்கலாம் அல்லவா?

இவர்கள் ஆபத்தான புல்லுருவிகள்,,என் தாய் தமிழச்சியே!!!! உன்னிடம் கருணைக்கு நிகரான ரௌத்திரமும் உண்டு, மறந்துவிடாதே,இந்த துரியோதனாதிகளை விட்டுவைக்காதே...களை எடுக்கப் புறப்படு....நாங்கள் உன் பின்னால் நிற்கின்றோம்.வாழ்த்துக்கள்

அம்பிகையை வழிப்பட எளிய முறை மந்திரங்கள்

ஓம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதியின் தாயே அம்பிகே போற்றி போற்றி
ஓம் ஹ்ரீம் க்லீம் அவ்வும் சௌவும் சரஹணபவ சயிலொளிபவ ஆறுமுகபவ ஆறுபடை உடையோனின் ஆனந்தத் தாயே போற்றி போற்றி
ஓம் நமசிவய ,யநமசிவ, வயநமசி, சிவயநம, மசிவயந எனும் மூலமந்திர மாணிக்கம் பரமசிவனின் பக்கம் அமர்ந்த அன்னையே போற்றி போற்றி
ஓம் நமோ நாராயணா என்ற அஷ்டாட்ச்ஷரத்தை அங்கமாகவுடைய அச்சுதனின் கூடப்பிறப்பே போற்றி போற்றி
ஓம் வங் யங் மங் நங் சிங் என்று ஓதுவார் தன்முன் இருந்து அருளும் ஆட்சி பொருளே அன்னையே போற்றி போற்றி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மாங்கல்ய லஷ்மி மோஹினி சர்வ ரஷாம்பிகையே தாயே போற்றி போற்றி
ஓம் மங்களே மங்களதாரே மாங்கல்யே மங்களப்ரதே மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே சதா

Sunday, August 22, 2010

REALITY


The Easterners core theory of spirituality is reaching the true consciousness within, called SATH CHIT ANANDA, Sath means truth,Chit means consciousness and Ananda means bliss.This is the only ultimate aim for an aspirant to walk on the path of spiritual.


When the true searching starts within one self, he will indulge into him self, with the enquiry of who,what, and why ?why i am here?who am i?what is the purpose of this life?someone when to Bhagawan Buddha and asked him, who are you?Buddha was keeping silent, and he started asking him, are you a Sadhu?replied no, are you a Nyani?replied no, are you a human? replied no,than he got irritates and ask Buddha are you an animal?Buddha said no.He got annoyed and shouted at Bhagawan, than who the hell you are?


Bhagawan Buddha replied, I'm a total awareness, just mirroring each and everything....!!!!While In the process of inner searching the aspirant will find the master who had been in the path of Sadhana and attained the wisdom .Those are the great people called Sathguru.A dogma in this spiritual philosophy is "stop looking for the path and become the path"simply means, stop searching for the master while search for your self. In this persistant journey , one may find the right spiritual master and with his guidance, you may elevate to the higher dimensions .
"தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை....."
"தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே"
means know Thy Self....

We are aware of many things happening surrounding us.How many of us aware of ourselves?We are not human being with spiritual experiences but spiritual beings with human experience. How many of us aware of this ideal statement???Each human has created in such away, whereby he can creates whatever he wants or manifest, never to other living beings on the Earth.A precious Gold mining has left abandoned many-many births abroad.


Hey man! i understood what you are saying, but than where do i starts..?Do i need to look for the Guru,do i need to become a vegetarian,do i need to trivialize my surroundings or do i need to go to Himalayas?The only criteria which can lead to the ultimate truth is the utmost thirst of self enquiry.Without this thirst of self searching ,you may not find any purpose of the great masters in your live journey.Many of them are manipulating the royal ideal path of spiritual without knowing the real essence ."When the student is ready the master will appear" simple as it.......prepare our self towards the journey instead of searching for Guru's or wasting our time running behind them.Understand something, the real masters don't like the followers, because their existence on the earth merely to make you as an enlightenment beings so that you can light thousands and thousand for others.MANY out there are in the comfort zone of being followers instead of understanding the REALITY.


If he goes off, than we tend to look for the other person to comfort us.How long do we tentatively going to do this ?Its going to be an endless journey indeed, because we have already mesmerized by someone unconsciously and we lost our individuality and identity.So dependent will remain certain, when dependent dominates you, there you go!! very subliminal slavery thoughts starts acquiring within you and starts slashing you from the total independent or WISDOM.........Its occurred very subliminally to most of us without our consent,result???? we become the blind in the dark room with thousands and thousands uncertain thoughts and dilemma's forever.A life full of questions and unsettled business !!!!! Is this our reality???
Here to remind you again...A great awareness,peace,silent and bliss is hiding in you ,go back to you nature...BY NATURE ALL, ARE A BUDDHA, BUT WITH OUR IGNORANCE WE NURTURED OUR LIVES INTO MISSERIES..........!!!!! love all....

Thursday, August 19, 2010

வரும் முன் காப்பது அறிவு


வசதி இருக்கக் கூடியவர்கள் முடிந்தால் வாரம் இருமுறை வராட்டி,மருதாணி மரத்து விதை,வேப்பமரத்து காய்ந்த இலை சிறிது பச்சைக்கற்பூரம்
இவற்றுடன் மஞ்சள் பொடியைக் கலந்து வீடு முழுவதும் புகை போட்டால் காற்றில் பரவி வரும் நச்சுக்கிருமிகள் சாகும்.தற்பொழுது மனித இனத்தை பயமுறுத்திக்கொண்டிருக்கும் H1NI மற்றும் INFLUANZA A TYPE B TYBE இந்த தொல்லையிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.கைகண்ட அனுபவமுறையாகும்..உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்ளுங்கள்..

.

Sunday, August 15, 2010

உண்மை சகோதரனுக்கு உயிர் எழுதிய உரிமைக் காவியம்..

உயரத்திலோ குள்ளம், ஆனால் எதார்த்தத்தின் அகராதியில் இவனோர் சர்க்கரை வெல்லம்,
சிரித்தால் காண்பதுவோ இவனின் வெள்ளை உள்ளம்
பலரின் இதயமோ இவனுக்கு ஆனந்த இல்லம்....

தமிழ்பால் தாகம் கொண்டு, பல எதிர்ப்பால் உயர்வைக் கண்டவன்
தமிழ் வாழ, தமிழர் வாழ தன்னையே தமிழுக்கு தாரை வார்த்துக்கொண்டவன்
அந்தரங்கத்தில் இவன் எப்படியோ அரங்கத்திலும் அவன் அப்படியே,

பலர் வாழ, இவனின் நிழல் குடையாய் தாங்கியது ஒருப்புறம்
இவன் வாழ, பலரின் விரல்கள் விமர்சனங்களாய் இவனை
தீண்டி ரணப்படுத்தியது மறுப்புறம்...

தமிழனுக்கு உடன் பிறந்த பெருமைகள் பல இருப்பினும்,
தரணியிலே தொற்று நோயாய் ஒட்டிக்கொண்ட ஒன்று
"தானும் படுக்க மாட்டான் தரையையும் கொடுக்கமாட்டான்"
என்பதே தமிழனின் இடைக்காலச் சிறப்பு

இந்த உண்மைத்தமிழனின் அர்பணிப்பிற்கும் சேவைக்கும்,
அற்பத்தழிழனின் எத்தனை எத்தனை விமர்சனங்கள் !!!!!
இவன் வாய் ப்ரசங்கத்தின் வழி, எத்தனையோ ஏழைக்கு
வயிற்றுப்பசி தீர்ந்துக்கொண்டிருப்பதை யார் அறிவார்????

இதுக்கால் இவன் செய்த தொண்டு
தமிழ் தாய் மட்டுமே அறிவாள்,
மெய்பொருள் கண்டவன் இவன்,
ஒருப்போதும் கைப்பொருளை பற்றி இவனுக்கு இருந்ததில்லை கவலை...

ஓர் உண்மைத் தெரியுமா??எந்த ஒரு உண்மையாளனும்
நிகழ்காலத்து நிழலாகவே நிற்றிருப்பான்..அவன்
வாழும்காலத்தில் உலகம் அவனை அறிந்துக்கொண்டதில்லை
வரலாற்றின் கர்ப்பத்திலே இந்த உண்மைகள் உறங்கிக்கொண்டிருக்கின்றன....

காலத்தின் கட்டாயம் நீ பேச வேண்டும் என்று,
உன் அடிச்சுவடு பற்றி வந்த, எனக்கோ ! பேசி சலித்துவிட்டது,
அப்பப்பா !! போதும்...போதும் !!!!!
இந்த பாவி தமிழர்களின் மேல் நீ வைத்திருக்கும் பற்றிற்கு
அளவில்லை என்பதை, உன் பதினைந்து வருடக்கால வரலாறு
பதிவு செய்துவைத்திருக்கின்றது..

உன் மேல் எனக்கு நீண்ட ஒரு நாள் வருத்தம் உண்டு,
நீயும் நானும் ஒரு சாதி என்பதை நீ நன்றாகவே அறிவாய்
ஆதம் நபியின் வழித்தோன்றல் நீயும் நானும்,
நீ முந்தி நான் பிந்தி.....


ம்ம்ம்ம்!!!! என்ன வருத்தம் என்று நீ நினைக்கலாம்
வருத்தமே நீதானப்பா !!!!!!
உன் உயிர் படும் வேதனையை நான் அறிவேன்
என் உயிர் படும் வேதனையை நீ மட்டுமே அறிவாய்

உனக்கு உன் சேவை முக்கியம்தான் சந்தேகமில்லை
ஆனால் அதை விட எனக்கு நீதான் முக்கியம்
காரணம் ஏன் தெரியுமா??? ஓர்க்கால் நான் முந்திக்கொண்டால்
உன் சகோதரனை முறையாக அடக்கம் செய்ய இங்கு யாருக்கும் தெரியாதப்பா!!!!
பயித்தியத்தின் உடலுக்கு ஒரு பயித்தியம்தான் வயித்தியம்
பார்க்க வேண்டும் என்பது சூஃபியின் சூத்திரமாகும்..


உடலுக்கான இடைவெளியில் தூரம் இருக்கலாம்
நம் உயிர்களுக்கான தூரம், ஒருப்போதும் இருந்ததில்லை
சகோதரனே உன் உடலை பார்த்துக்கொள், எனக்கு நீ வேண்டும்...
"ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்" இது பலரின் திட்டம்..

வாழி நின்றன் தமிழ் தொண்டு
ஆழிப்போல் வற்றாத புகழ் உண்டு
காதரே உன் சேவைக்கண்டு
காளி என்றும் துணை நிற்பாள் தன் வாள் கொண்டு...

secrets of Black Pepper....

Dear friends here are some tips on Black Pepper.This remedial was documented by Siddhar Teraiyar around 500 years ago.Many of us knows that pepper is a spices for our daily cooking purpose.Whereby our Theraiyar Siddhar profoundly stated in his "Theraiyar vaitiya surukkam" black pepper has a great medicinal value.
In Siddha philosophy we have this terms of word called (கற்பம்)KARPAM, means keeping the physical body in a right condition or balancing the five basic elements in its right proportion, in order to attain immortality or Jeevanmukthi {emancipation}.Therefor Siddhars has found many simple ways to keep the body in a right biological stage .Many of us failed to understand that our body is vehicle to carry our inner self to the ultimate goal but what happened here we merely indulged into this materialistic realm and find hard time to reach the sore indeed.
The Sodium (salt) level in our blood will slash the red cells called Hemoglobin,Hemoglobin contains of iron.The Hemoglobin mobilizing oxygen to all our parts of our body.If the blood contains to much of sodium the person tend to get BP and imbalance of HDL and LDL level or skin disorders like tumours and growths{ரத்தத்தில் பித்தம் கூடும் நிலை}
Siddhar THeraiyar Rhisi is giving a simple remedy to overcome this problem.Wash the black pepper and dry it and pound into fine powder form.The consuming method is, morning take a pinch of this powder add with a teaspoon of pure ghee and eat, while Evan can boiled this pepper and add brown sugar or Palm tree sugar and consume it.The duration are 96 days for better result.Another way also given by some siddha practitioner's,also a simple way of doing, early morning, before break fast, try to swallow 7 peaces of pepper and drink warm water.Gradually the person start seeing the level of immune will increase,solving indigestion disorder,the blood become purified and the cells system starts rejuvenates.

தேரையர் என்கின்ற சித்தர் அருளிய எளிய முறை வைத்திய ரகசியம்.






மிளகு ரகசியம்

. " மரிசமொவ் வொன்றாரு வார மட்டதிக
வரிசையாய்த் தினமுமோர் மண்டலங் காலமே
யுண்டிடு தேசுடனுரமிகு பசியுங்
கொண்டிடு மதன்பொடி குழைத்து நெய்யுடனெ
யுண்டிடத் தொனிதரும் மோதுபிப் பொருளொடக்
காரமுங் குழைத்துணக் கடும்பசி யழலுறும்
பாரிய நோய்களும் பறக்கும் தொன்றையும்
குடி நீர் ரட்டுணக் குலவுமுத் தோடமுங்
கொடும்பிணி யாவும் குடிகெட்டோடுமே "

இந்த மிளகை 48 நாட்கள் (ஒரு மண்டலம்) முறையாக உண்டு வந்தால் உடல் கற்பமாகும் என்கின்ற வகையில் தேரையர் கூறுகின்றார்.இது நடைமுறையில் சாத்தியமா என்று ஆராய்ந்துப் பார்த்தால் உண்மைதான்.அடியேன் பல வருடங்களுக்கு முன்பதாக இதை ஒரு பெரியவர் மூலமாக அறிந்து செய்துப்பார்த்தேன் என் உடலிலேயே பல மாற்றங்கள் நிகழ்ந்தது.ஆனால் இதை பின்பற்றுவதற்கு சில விதிகள் உண்டு அதை முறையாக அனுசரித்தால் பலன் அபாரம்.
இந்த மிளகை இளம் வறுவலாக வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு நெய்யுடன் ஒரு சிட்டிகை அதாவது உங்களின் பெருவிரல் ஆள்காட்டி விரல் இவற்றால் எடுத்தால் சிட்டிகை எனப்படும் இது சித்த மருத்துவ அளவு வகைகளில் ஒன்றாகும்.இப்படி காலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்படும் கரகரப்பு, சளி தொல்லைகள் மறைந்து குரலில் இனிமை உண்டாகும்.
இதை பனக்கற்கண்டு அல்லது வெல்லம் இவைகளுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான நோய்களான தலைவலி,நெஞ்சு எரிச்சல்,அஜீரணம்,தோல் நோய்கள் இவைகள் சரியாகும்.பொதுவாக மிளகைக் குடி நீராக காய்ச்சிப் பருகி வந்தால் ரத்தம் சுத்தியாகும்,த்ரிதோசங்கள் நீங்கும் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் கூடும், ஆரோக்கியமான வாழ்க்கை உண்டாகும்.

சித்தர்கள் வாக்கு பொய்ப்பதில்லை.செய்து பலன் காணுங்கள்.....
{ரகசியங்கள் தொடரும் }

Friday, August 13, 2010

பாவம் அவள்


புத்தருக்கும் ஏசு முகமதுவுக்கும் உதித்தது உண்மையின் தத்துவம் இங்கே..
விலங்குக்கும் ஓரறிவு முல்லைக்கும் கருணைக்காட்டியவனும் இங்கே

அப்பாவி மனிதர்களை கொன்றுக்குவித்து, மரண ஓலத்தை சங்கீதமாக ரசித்த,
ஹிட்லரும் அவன் பார்ட்னர் இடியமீன், இவன் வழித்தோன்றல் ச்சீ.. ச்சீ.. ச்சீ... சிங்களவனும் இங்கே...


பரந்த பூமித்தாயின் மார்பகத்தை கூறுப்போட்டு - இந்தப்
பாகம் என்னுடையது அந்தப்பாகம் உன்னுடையது என்று
கோடுகளை கீறி,
உன் நாடு என் நாடு என்று -அவளை
அவலப்படுத்தும் அவமானச்சின்னங்களாய்,
ஆறறிவுப் படைத்த மனித மிருகங்கள் தோன்றுவதும் இங்கே....

அப்பாவி பூமித்தாயின் கருவினிலே இப்படியும் சில
ஈனக்கரு...பாவம் நீ சுமப்பவள் தானே !!!!
உன் கணவனையாவதுக் காட்டு பூமி மாதா.....!!!! அவனிடமாவது முறையிட்டுப்பார்க்கின்றேன்,
இனியாவது, புதியதோர் மனித குலத்திற்கு வித்திடுவாயா என்று !!!!!!!

கலவியில் பிறந்து, கேள்விகளில் வாழுகின்றோம்.....!!!!

உடல் எடுத்தக் காரணமும் தெரியாது - இதற்குள்
உயிர் வந்த சூட்சமமும் தெரியாது -_ இறுதியில்
ஊரெல்லாம் கூடி அழும் வேதனையும் புரியாது....
ஏனிந்தப் பிறவி?? ஏனிந்தப் பிறவி??


புதிதல்ல இந்த பூமி , புதியவர்களும் நாமல்ல இங்கு- இருந்தும்
புதிரோடு புலம்புகின்றோம்..புரியாமல் வாழுகின்றோம்,

வாழ வந்த வையகத்தில் வழி தெரியாத ஒரு பயணம்,
இருக்கும் உலகமோ ஒன்று, காணும் பாதைகளோ கோடி - இதில்
என் பாதங்களின் சொந்தப் பாதை எந்தப்பாதை???