இந்தப் பல்கலைக்கழகத்திற்கு அகவை எழுபது. ஒரு சாகப்தம் வாழும் காலத்தில் நாம் வாழ்கின்றோம் என்று நினைக்கும் பொழுது "என்னப்புண்ணியம் செய்தனை நெஞ்சமே.." என்கின்ற
வரிகள்தான் சாலப்பொருந்துகின்றது..
யார் இவர்?
சாக்தஸ்ரீ,காடாரப்பேரறிஞர்,சித்தர்குலபதி டாக்டர்.சி.ஜெயபாரதி தான் இத்துணை பெருமைகளுக்கும் உரியவர்.நல்லதோர் விளைச்சல் கரும்பை எங்கே சுவைத்தாலும் தித்திப்பதுப்போல்,இவரின் தன்மையும் அத்தகையதே.
பழந்தமிழ் இலக்கியம் தொடங்கி வானசாஸ்திரம்,
சிற்பக்கலை,வர்மக்கலை,மந்திர சாஸ்திரம்,ஓலைசுவடிகள் ஆய்வு,கல்வெட்டாய்வு,தொல்பொருளாய்வு என்று அடேய்யப்பா இன்னும் எத்தனை-எத்தனையோ கலைகள் இவருக்குள் சங்கமம் ஆகியுள்ளது என்று நினைக்கும் பொழுது இது பிறப்பல்ல சிருஷ்டி என்றே சிந்திக்கத்தோன்றுகிறது!!!
இவர் தமிழ் நாட்டில், மதுரையம் பதியில் தனது மருத்துவக்கல்வியை மேற்கொண்டிருக்கும் பொழுது அன்று மதுரை ஆதீனப் பொருப்பில் இருந்த ஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் அவர்களின் நட்பு கிட்டியது.இந்த ஸ்வாமிகள்தான் பல வருடங்களுக்கு முன்பு "ஆவிகளுடன் பேசுவது எப்படி" என்கின்ற சிறு நூலை அச்சிட்டு வெளியிட்டிருந்தார்கள்........{தொடரும்}
No comments:
Post a Comment