அந்தி மாலைப் பொழுது....
கடற்கரை மணலில் நடந்துக்கொண்டிருந்தன என் கால்கள்,
காண நேரிட்டது இந்த பிரபஞ்ச வீதியில்,
இப்படியும் ஒரு உன்னத கலவையை .
கைகளிலே எடுத்துப்பார்த்தேன், உயிரை கடலில்
தொலைத்து விட்டு,உடலை கரைக்கு சொந்தமாக்கிக்கொண்ட
சிப்பிகளின் சிதறல்களை,
அடேயப்பா ! எத்தனை-எத்தனை வகை சிப்பிகள்,
அத்தனையிலும் அந்த ஆதி சிற்பியின் மாயஜால
வினோதங்கள்..
உணர்த்தப்பட்டது ஓர் உண்மை!!!
ஓர் அறிவை மட்டும் உரிமையாக்கிக் கொண்ட சிப்பி,
உயிர் பிரிந்தும் ரசிக்க தக்க நிலையில் உயர்ந்திருக்கின்றது,
ஓர் அறிவு ஜீவிக்கு இத்தனை ஈர்ப்பு இருக்குமென்றால்
ஆறறிவு ஜீவிக்கு எத்துனை ஈர்ப்பு இருக்க வேண்டும்? !!!
ஆனால்!! நான் இறந்த பிறகு, இந்த சிப்பியை போல்
இரசனைக்கு உரியவனா அல்லது
நாழிகையோடு எடுத்து விடுங்கள் நாறிவிடும் என்ற
வேதனைக்கு உரியவனா?????
{போர்டிக்சன் கடற்கரை 20/8/08}
No comments:
Post a Comment