You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Thursday, April 29, 2010

Amazing of our Thirukkural


THIRUKKURAL has revealed the Law of Attraction 2000 years back.
"Whatever people desires,they get as desired if only they have firmness of mind."
"Men of resolute mind will surely achieve whatever they wish for."
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணிய திண்ணியராகப் பெரின்...{666} வினைத்திட்பம்The Law of Attraction formula was stated in chapter 67 "firmness in action" Thirukkural { Holy Scripture of Tamilians} by Saint Valluva Naayanaar approximately 2000 years back.

Human thoughts are very basically produces Bio-Electro magnetic charges from the day he started to breath.These charges are spreading out through three hundred millions of pores from human body.Whatever we thinks from our cognitive level are triggering our brain and passing through medulla oblongata (back brain)from here it drives to sympathetic and parasympathetic autonomic nervous systems and merges in our blood as a vibes .Blood has the potential of storing energy and reacting towards the thought patterns....

Why???Any water elements are very sensitive towards human Biomagnetism... for an example in Church they will offer holy water,in the Mosque the Moulana or Imam chants the water for some mystical purpose like healing and so on and Zam-Zam water in Mecca is very holy for a Muslim , whereas in Hindu religion many of them believes in taking bath at Holy Ganges and you will find in most of the temples the priest will offer holy water called "THEERTHAM".

Recent research was done by a professor in Japan and the end of his conclusion showed that water element can react towards human thoughts and feelings .He further more explained, any constructive thought patterns or feelings are structurally forming a Geometrical design in to the molecules of H20.This research and the theory was proclaimed as a Water Therapy through out the world by this professor.

Well ! scientifically the research has proved that water can react towards human thoughts .The proportion of a water element in human body is about 70% which is blood and brain.The truth behind all the religion which dwelling with water is purely science, whereby the divine energy are transmitting into the water for some divine mystical purpose . Now if any water elements can react towards human thoughts..aren't blood?

Certainly yes ,blood is reacting and stimulating too, by our thoughts !At this process the blood is manifesting waves from our body each and every moment .Ever cross this quotation?.. "We Are The Architect Of Our Own Life".So human are the master designer of their own life pattern by creating negative and positive thought waves.This was a Amazing scientific insight was discoverd by Saint Thiruvalluvar naayanar...many more..!!!!!

Thursday, April 22, 2010

சும்மா இருப்பது சுகம்!!!!!

தியானம் செய்வது எப்படி, தியானம் செய்வது எப்படி என்று நிறையப்பேர் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.தியானம் செய்வது எப்படி என்று கேட்பதை விட சும்மா இருப்பது எப்படி என்று அறிந்துக்கொள்வது சிறப்பு.தியானம் என்பது தானாகவே நடக்ககூடியது.சும்மா இருக்கத் தெரிந்தால்தான் தியானம் முழுமையாக சித்தியாகும்.

சும்மா இருப்பது எப்படி?முருகக்கடவுள் அருணகிரியாருக்கு உபதேசித்ததுவும் இதுவே,"சும்மா இரு சொல்லற",தாயுமான ஸ்வாமிகளும் இதை "சும்மா இருக்கும் திறம் அரிது" என்கிறார்.நன்றாக கவனியுங்கள் மனித மனம் எப்போதும் கடந்தக்காலம் அல்லது எதிர்காலத்தில்தான் இருக்கும்,நிகழ்காலத்தில் நிற்பது என்பது இயலாத காரியமாகும் இந்த மனத்திற்கு.

எப்பொழுது மனம் நிகழ்காலத்தில் நிற்க தொடங்குகின்றதோ,அதன் சக்தியானது மையத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும்.நாம் எதையாவது செய்யும் பொழுது நம் சக்தி விரயமாகி வெளி செல்லத்தொடங்கும் செய்கை எல்லாம் சக்தியை வெளிபடுத்தும்.செயலை கடந்த போது சக்தி உள்ளே கடந்துச்செல்ல தயாராகும் .இந்த உள்பயணம் தொடங்கிவிட்டால் வெளிப்பயணமாகிய மரணத்தின் வாசல் மூடப்பட்டுவிடும்....எப்படி வசதி????வாழ்த்துக்கள்!!!!!!!

சும்மா இருப்பது சுகம்!!!!!

Wednesday, April 7, 2010

சகாப்தம்

இந்தப் பல்கலைக்கழகத்திற்கு அகவை எழுபது. ஒரு சாகப்தம் வாழும் காலத்தில் நாம் வாழ்கின்றோம் என்று நினைக்கும் பொழுது "என்னப்புண்ணியம் செய்தனை நெஞ்சமே.." என்கின்ற
வரிகள்தான் சாலப்பொருந்துகின்றது..

யார் இவர்?

சாக்தஸ்ரீ,காடாரப்பேரறிஞர்,சித்தர்குலபதி டாக்டர்.சி.ஜெயபாரதி தான் இத்துணை பெருமைகளுக்கும் உரியவர்.நல்லதோர் விளைச்சல் கரும்பை எங்கே சுவைத்தாலும் தித்திப்பதுப்போல்,இவரின் தன்மையும் அத்தகையதே.
பழந்தமிழ் இலக்கியம் தொடங்கி வானசாஸ்திரம்,
சிற்பக்கலை,வர்மக்கலை,மந்திர சாஸ்திரம்,ஓலைசுவடிகள் ஆய்வு,கல்வெட்டாய்வு,தொல்பொருளாய்வு என்று அடேய்யப்பா இன்னும் எத்தனை-எத்தனையோ கலைகள் இவருக்குள் சங்கமம் ஆகியுள்ளது என்று நினைக்கும் பொழுது இது பிறப்பல்ல சிருஷ்டி என்றே சிந்திக்கத்தோன்றுகிறது!!!
இவர் தமிழ் நாட்டில், மதுரையம் பதியில் தனது மருத்துவக்கல்வியை மேற்கொண்டிருக்கும் பொழுது அன்று மதுரை ஆதீனப் பொருப்பில் இருந்த ஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் அவர்களின் நட்பு கிட்டியது.இந்த ஸ்வாமிகள்தான் பல வருடங்களுக்கு முன்பு "ஆவிகளுடன் பேசுவது எப்படி" என்கின்ற சிறு நூலை அச்சிட்டு வெளியிட்டிருந்தார்கள்........{தொடரும்}

நிழல்களும் நிஜங்களும்!!

ஈற்றெடுத்த தாய் விடைப்பெறுவாள் ஓர் நாள்,
இணையில்லாத் தகப்பன் விடைப்பெறுவான் ஓர் நாள்,
உடன் பிறந்த உதிர பந்தங்கள் விடைப்பெறும் ஓர் நாள்,
உண்மையற்ற ஊர் உறவுகள் விடைப்பெறும் ஓர் நாள்,
காதலிக்கும் கன்னியரும் விடைப்பெறுவாள் ஓர் நாள்,
காலத்தால் நன்றிமறவா உயிர் நண்பர்களும் விடைப்பெறுவார்
ஓர் நாள்.....

இன்னுமோர் அதிசயம் கேள் ???!!!!!

இதுவரை நான் சுமந்த இந்த உடற்பையும்
விடைப்பெற போகின்றது ஓர் நாள்,
நிலையில்லா வாழ்க்கையிலே
நிரந்தரமானதெது ? நித்தியமானதெது?
நிழல்கள்தான் நித்தியமென்றால்
நிஜங்களே நீங்கள் எங்கே?????

சிப்பிக்கூட குருவாகும்!!!!!!!

அந்தி மாலைப் பொழுது....

கடற்கரை மணலில் நடந்துக்கொண்டிருந்தன என் கால்கள்,
காண நேரிட்டது இந்த பிரபஞ்ச வீதியில்,
இப்படியும் ஒரு உன்னத கலவையை .
கைகளிலே எடுத்துப்பார்த்தேன், உயிரை கடலில்
தொலைத்து விட்டு,உடலை கரைக்கு சொந்தமாக்கிக்கொண்ட
சிப்பிகளின் சிதறல்களை,
அடேயப்பா ! எத்தனை-எத்தனை வகை சிப்பிகள்,
அத்தனையிலும் அந்த ஆதி சிற்பியின் மாயஜால
வினோதங்கள்..

உணர்த்தப்பட்டது ஓர் உண்மை!!!

ஓர் அறிவை மட்டும் உரிமையாக்கிக் கொண்ட சிப்பி,
உயிர் பிரிந்தும் ரசிக்க தக்க நிலையில் உயர்ந்திருக்கின்றது,
ஓர் அறிவு ஜீவிக்கு இத்தனை ஈர்ப்பு இருக்குமென்றால்
ஆறறிவு ஜீவிக்கு எத்துனை ஈர்ப்பு இருக்க வேண்டும்? !!!

ஆனால்!! நான் இறந்த பிறகு, இந்த சிப்பியை போல்
இரசனைக்கு உரியவனா அல்லது
நாழிகையோடு எடுத்து விடுங்கள் நாறிவிடும் என்ற
வேதனைக்கு உரியவனா?????
{போர்டிக்சன் கடற்கரை 20/8/08}

Monday, April 5, 2010

புதுவருட தகவல்கள்

பிறக்கப்போகும் புது வருடத்தின் பெயர் விகிர்தி. 14-04-2010 புதன் கிழமை காலை 9.27 க்கு ரேவதி நட்சத்திரத்தில் வருடம் பிறக்கின்றது.முன் இரவே இந்த பொருட்களை எல்லாம் நீரில் கலந்துக்கொள்ளவும் துளசி,வேப்பிலை,மஞ்சள் பொடி,கல் உப்பு,பச்சைக்கற்பூரம்,வில்வஇலை,கோமயம்,இளநீர்.பிறகு மறுநாள் காலை உடம்பில் பச்சை வர்ணத்தில் ஏதேனும் ஆடை அல்லது துண்டு அணிந்துக்கொண்டு குளிக்கவும்.குளிக்கும் பொழுது புதன் பகவானையும் விஷ்ணு பகவானையும் மனதில் நினத்துக்கொள்ளவும்.கண்டிப்பாக அன்று பச்சைபயிறு தானியத்தை புறாக்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

கீழ்க்கண்ட இந்த மந்திரத்தை 27 முறை ஜபம் செய்து பின் தாய் தகப்பனை வணங்கி,ஆலயம் சென்று மாஹகணபதி பெருமானுக்கு வழிப்பாடுகள் செய்யவும்.

1} ஒம் மம் ஹரி ஹும் சிவ புத தேவாய நமஹ

2} ஒம் நமோபகவதே வாசுதேவாய..

குறிப்பு:-அன்றைய தினம் முடிந்த அளவு ஏழை எளியவர்களுக்கு
ஏதேனும் தானங்கள் செய்யவும்.மிகவும் நன்மை
உண்டாகும்.