
வித்யாலங்கார சாக்தஸ்ரீ பேரறிஞர் டாக்டர்.சி.ஜெயபாரதி பலருக்கும் பரிட்ஷியமானவர்.இவரை கடாரப்பேரறிஞர் என்றும் கூறுவர்.மேடானில் பிறந்த பின் மலாயாவிற்கு தன் தகப்பனாரோடு புலம்பெயர்ந்த இவர், பினாங்கில் தன் ஆரம்பக்கல்வியை தொடங்கினார்.இன்று இந்த சாகாப்தத்திற்கு வயது 68.தன் வாழ்நாள் முழுவதையும் தமிழிற்கும் சமயதிற்கும் அர்ப்பணித்துகொண்ட இல்லறத்து ஞானி.இவரின் மனைவி சந்திரா அம்மாவின் உபசரிப்பிற்கு ஈடு இணை இல்லை,டாக்டர். அவர்களின் ஞானவேள்விக்கு இவரின் மனைவியார் ஆற்றிவரும் சேவை மகத்தானது போற்றதக்கது .இவர் இதுவரை தொட்டு ஆராய்ந்துப் பேசாத விசயங்களே இல்லை என்று சொல்லாம்.ஆழ்ந்த இறைஞானம் ,உண்மையான பக்தி,பரோபாகார சிந்தனை இவைகளேல்லாம் பரிபூரணமாக நிரம்பப்பெற்றவர்.இவரிடம் நான் கண்ட இன்பம் எதார்த்தம் ! கோபப்பட்டால் அதில் எதார்த்தம் இருக்கும் அன்புக்காட்டினாலும் அதில் எதார்த்தம் இருக்கும்..அதிதீவிரமான அம்பிகை உபாசகர்.சித்தர்களின் போக்கு பல நேரங்களில் புரிந்துக்கொள்ள முடியாததாக இருக்கும், அதற்காக அவர்கள் பயித்தியங்கள் என்று முடிவு கட்டுவிடுவது நம்முடைய பலவீனமாகும்.இந்த சித்தரை சிவபாரதிக்கு ஏறக்குறைய 20 ஆண்டுகள் தெரியும் ஆனால் இன்னமும் இவர் எனக்கு புரியாத புதிர்..இவரின் மன ஓட்டத்தை புரிந்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல ஆனால் இவரின் முன்னால் அமர்ந்த மாத்திரத்தில் நம் மன ஓட்டத்தை புரிந்துக்கொள்ளும் ஆற்றலுடையவர்..பல சந்தர்பங்களில் நான் இதை உணர்ந்திருக்கின்றேன்.தற்போது கணினி வழி தன் சேவைகளை செய்துவருகின்றார்..ஒரு நிதர்சனமான உண்மையை கூறுகின்றேன் ஆசான் கோபாலஸ்வாமியை அடுத்து அடியேனுக்கு ஞானப்பிச்சையும் அறிவுப் பிச்சையும் இட்டவர்
இவர்.இந்த உண்மையாளருக்கு அடியேனின் உயிர் வணக்கங்கள்.
வாய்ப்புள்ளவர்கள் தேடல் உள்ளவர்கள் தேடிச்செல்லலாம்.
No comments:
Post a Comment