You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Tuesday, April 26, 2011

Sidhars who are living in the body of the snakes....




நாம் நாகத்தை பாம்பாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் நமது பண்டைய கால ஞானிகள் பாம்பு வடிவத்தை மூலாதார சக்கரத்தில் உறங்கி கொண்டிருக்கும் குண்டலினி சக்தியாக பார்த்தார்கள்.

புற்றுக்குள் இருக்கும் பாம்பு சீண்டி விட்டால் சீறிக் கொண்டு எப்படி கிளம்புமோ அதே போலவே யோக பயிற்சியால் சீண்டப்படும் குண்டிலினி தண்டுவடத்தை பற்றிக் கொண்டு சரசரவென பிரம்ம கபாலத்தை நோக்கி எழும்பும் என்று சொன்னார்கள்.

இதனால் தான் கடவுள்களின் உருவத்தோடு நாகத்தை சம்பந்தப்படுத்தினார்கள்.

பரந்தாமனின் பாம்பு படுக்கை பரமசிவனின் பாம்மனி எல்லாமே குண்டலினி தத்துவத்தை விளக்க எழுந்ததே யாகும்

இனி நாக வழிபாடு நம் நாட்டில் எப்போது இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை சற்று ஆராய்வோம்.
இந்திய துணைக்கண்டம் முழுவதுமே ஆதிகாலம் தொட்டே நாக வழிபாடு, இருந்து வருகிறது.

சைவம், வைஸ்ணவம், பௌத்தம், ஜைனம் போன்ற மதங்கள் வளர்ச்சி அடைந்த காலத்தில் அந்தந்த சமயத்தின் சாயல்களை கொண்டு இந்திய துணைக் கண்டம் முழுவதுமே நாக வழிபாடு விரிவடைந்தன என சொல்லலாம்.

திருமாலும் சிவபெருமானும் மட்டுமே நாகங்களை துணையாக கொள்ளவில்லை. பல புத்தர் சிலைகளை பார்க்கும் போதும் மகாவீரரின் சில தோற்ற கோலங்களை காணும் போதும் ஐந்து தலை நாகம் அவர்களுக்கு குடைபிடித்து இருப்பது தெரிகிறது.

சிந்து சமவெளி நாகரிக காலத்திலும் அதற்கு முன்னரும் கூட நாகங்களை மக்கள் வழிபட்டு இருக்க வேண்டும்.

ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு முத்திரைகளில் வழிபாட்டுக்குரிய நாகங்கள் செதுக்கப்பட்டிருப்பதை வைத்து நாம் இந்த முடிவுக்கு வரலாம்.


வேதங்களில் பல இடங்களில் பாம்புகளை பற்றி விரிவான குறிப்புகள் வருகின்றன.

வேதகால மக்கள் பாம்புகளை அஹீ என்ற பெயரில் அழைத்திருக்கிறார்கள். ரிக், சாம வேதங்களில் வணக்கத்துக்றியதாக பாம்புகள் சொல்லப்படவில்லை.

ஆனால் யஜøர் வேதம் பாம்புகளை தெய்வ நிலையோடு ஒப்பிட்டு பேசுகிறது யஜூர் வேதம் பாஞ்சால நாடுகளில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும்.

பழங்கால பாஞ்சல தேசத்திடில் தலைநகரம் அஹீ சத்திரமாகும். அதாவது இதன் பொருள் பாம்புகளின் வீடு என்று சொல்லலாம்.

இந்த தேசத்தின் மன்னர்களாக விளங்கிய அக்னிமித்திரன், பானு மித்திரன் ஆகியோர்களின் காலத்து நாணயங்களில் பாம்பு முத்திரை பொறிக்கபட்டுள்ளது.
அதர்வண வேதத்தின் சில பகுதிகளில் பாம்புகளை தாந்திரிக நெறிக்கு பயன்படுத்தும் விபரங்கள் உள்ளன

நாக வழிபாடு பற்றி நித்தேஷ என்னும் பௌத்த நூலும் பேசுகிறது. அதில் சர்ஜீகோணோவில் உள்ள பகவா நாகோ என்ற வழிபாட்டுக்குரிய நாகத்தை பற்றி விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

குஷான மன்னர்களின் காலத்தில் இந்த நாக வடிவம் சிலை வடிவாக உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மதுராவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் கனிஷ்க மன்னனால் செதுக்கி வைக்கப்பட்ட நாக வடிவம் இன்றும் இருக்கிறது.

கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்ட நாகங்கள் காலப் போக்கில் இறந்தவர்களின் ஆவியோடு தொடர்பு படுத்தப் பட்டும் புதையல்களை மர்மமான முறையில் பாதுகாக்கப்படுகின்றன என்றும் நம்பிக்கை ஏற்பட்டது.


பாம்புகளை பொறுத்த வரை எல்லா மதத்தினரும் அறிவு பூர்வமாகவும், மூடத்தனமாகவும் நம்பினர் என்றே சொல்ல வேண்டும்.

பண்டைய கால சிற்பங்களும், ஓவியங்களும், நாகர்களும், நாக கன்னிகளும் காட்டப்படுகிறார்கள்.

இவர்கள் பாதி மனித உருவம், பாதி பாம்பு வடிவமும் பெற்றவர்கள்.

பாலித்தீவில் நாக கன்னிகை மழை கடவுளான வருண தேவனின் பனிப்பெண்ணாக கருதுகிறார்கள்.

மகாபாரதத்தில் அனுசாய பருவத்தில் நாகத்தை வழிபடுவதன் மூலம் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் பலத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

இதனாலேயே பிற்காலத்தில் உருவான வராக சிற்பத்தில் காலுக்கடியில் பாம்பு செதுக்கப்பட்டுள்ளது.


தமிழர்களின் தனிப்பெரும் வாழ்க்கை முறையை விவரிக்கும் சங்க இலக்கியங்களில் நாக வழிபாடு சிறப்பாக கூறப்பட்டுள்ளதை காணலாம்.

பொதுவாக பாம்புகளை வழிபடுவது இந்து மதத்தில் உள்ள யோக சார மார்க்கத்தின் வழிபாட்டு முறையேயாகும்.

ஆனால் அந்த உண்மை நிலை மறைந்து இன்று கிராம தேவதைகளின் பட்டியலில் நாக தேவதைகள் சேர்ந்து விட்டன.

இதற்கு முக்கிய காரணம் இறந்தவர்களின் ஆன்மா பாம்பு வடிவத்தில் உலாவுவதாக உள்ள நம்பிக்கையே ஆகும்

நல்லப்பாம்பு என்ற நாகத்தை வீணாக சாகடிக்க கூடாது என்று சொல்வதில் பல அமானுஷ்ய உண்மைகள் உண்டு

சித்தர்கள் பரகாய பிரவேசம் என்ற கூடுவிட்டு கூடுபாயும் வித்தை தெரிந்தவர்கள் என நமக்குத் தெரியும்
மனித ஆத்மாவானது மனித சரீரத்தை தவிற காக்கை மற்றும் நாகப்பாம்பின் உடல்களில் சுலபமாக பிரவேசிக்கலாம் என்று சித்தர்களின் ரகஸிய சித்தாந்தங்கள் சொல்கின்றன

இதனால் தவ வாழ்வை எந்தத் தொந்தரவும் இல்லாமல் கழிக்க பாம்பின் உடல்களை தேர்ந்தெடுத்து பல சித்தர்கள் வாழலாம்

நாம் தெரியாத்தனமாக சர்ப்பங்களை சாகடித்தால் அவர்களின் தவத்தைக் கலைத்த பாவத்திற்கு ஆளாவோம்

எனவேத்தான் பாம்புகளை சாகடிக்க வேண்டாமென முன்னோர்கள் சொன்னார்கள்

No comments:

Post a Comment