
அண்ணாமலையில் அன்னதானம் செய்யுங்கள்;நிம்மதியாக வாழுங்கள்
சாதாரண கோயில்களில் ஒரு வருடம் தொடர்ந்து செய்யப்படும் அன்னதானத்தால்
என்ன புண்ணியம் கிடைக்குமோ, அதை விட அதிகமான புண்ணியம் காசியில்
...ஒரே ஒரு நாள் ஏழை ஒருவனுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.
காசியில் ஒரு ஆண்டு முழுக்க செய்யப்படும் அன்னதானம் தரும் புண்ணியத்தை
விட அதிக புண்ணியம் திரு அண்ணாமலையில் ஒரே ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.
திருஅண்ணாமலையில் துவாதசி திதியன்று ஏழை ஒருவருக்கு செய்யப்படும்
அன்னதானமானது, அன்னதானம் செய்தவரின் வாழ்நாள் முழுக்க அன்னதானம்
...செய்த பலனைத் தரும் என்பது அண்ணாமலையாரின் வாக்கு.ஆதாரம்:
அருணாச்சல புராணம்.எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திரு அண்ணாமலையில் இந்த நாட்களில் வரும் நேரத்தில் ஒரு முறை அன்னதானம் செய்தாலும் போதும்.நமக்கு மறுபிறவி
கிடையாது.
அன்னதானத்தைப் பொறுத்தவரையில் திரு அண்ணாமலைக்கு இதில் குறிப்பிடப்பட்டுள்ள நாளுக்கு முதல் நாளில் வந்து,சமைத்து அவற்றை பொட்டலங்களாக கட்டிவிடுவது நன்று.அப்படி கட்டப்பட்ட உணவுப்பொட்டலங்களை கி...ரிவலப்பாதையில் வசிக்கும் துறவிகளுக்கு வழங்கலாம்.கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது வறுமை அல்லது முன்வினை
இவற்றில் ஏதாவது ஒன்றால் நாம் அல்லது நம்மைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மை!
ஏதாவது ஒரு நாளில் ஒரே ஒரு முறை துவாதசி அன்று
திரு அண்ணாமலைக்கு வந்து அன்னதானம் செய்து உங்களின் கஷ்டங்கள்,
முன்வினைகளை நீக்கி நிம்மதியாகவும்,செல்வச் செழிப்புடனும் வாழ்க.....
No comments:
Post a Comment